முதல்வர் புகழாரம் திராவிட பேரொளி அயோத்திதாச பண்டிதர்

சென்னை: தமிழன், திராவிடன் என்ற இரு சொற்களையும் அரசியல் அடையாளச் சொற்களாக மாற்றிய திராவிடப் பேரொளி அயோத்திதாசப் பண்டிதர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு: தமிழன், திராவிடன் என்ற இரு சொற்களையும் அரசியல் அடையாளச் சொற்களாக மாற்றிய திராவிடப் பேரொளியான அயோத்திதாசப் பண்டிதரின் பிறந்தநாளில், சமத்துவத்தை நோக்கிய நமது பாதையில் திண்ணமாக நடைபோட உறுதியேற்போம்.

முற்போக்கு இந்தியாவைப் படைப்போம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். உதயநிதி ஸ்டாலின்: திராவிட இயக்கத்தின் முன்னோடியான அயோத்திதாசர் பிறந்த நாளை முன்னிட்டு திமுக இளைஞர் அணி செயலாளரும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘‘தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் ஆகியோருக்கு முன்பே சாதி ஒழிப்புக் கருத்துகளை முன்வைத்து, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகத் தொடர்ந்து செயல்பட்டவர் அயோத்திதாசர்.

1891ம் ஆண்டு திராவிட மகாஜன சபையைத் தொடங்கி, சாதிபேதமற்ற பூர்வ பௌத்தர்களே திராவிடர்கள் என்று முன்மொழிந்து திராவிட அடையாளத்துக்கு வலுசேர்த்தவர். `ஒருபைசா தமிழன்’ இதழின் மூலம் சாதி ஒழிப்பும் பெண்களின் முன்னேற்றமுமே உண்மையான விடுதலை என்பதை வலியுறுத்திய திராவிடப் பேரொளி அயோத்திதாசப் பண்டிதரை அவரது பிறந்த நாளில் நினைவு கூர்வோம்’’ என கூறியுள்ளார்.

The post முதல்வர் புகழாரம் திராவிட பேரொளி அயோத்திதாச பண்டிதர் appeared first on Dinakaran.

Related Stories: