அமராவதி: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர்ராவ் சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் உடனடியாக ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது. தன் விவசாய பண்ணையில் ஹெலிகாப்டர் தரையிறக்கம் செய்யப்பட்டு கே.சி.ஆர். மாற்று ஹெலிகாப்டரில் சென்றார்.