கையில் பெரிய கத்தியுடன் கஞ்சா புகைக்கும் வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது: செல்போன் பறிமுதல்

சென்னை: கையில் பெரிய கத்தியுடன், கஞ்சா புகைப்பது போன்று வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறுவன் ஒருவன் கையில் பெரிய கத்திவை வைத்துக்கொண்டு, கஞ்சா புகைக்கும் வீடியோ வைரலாகி, திருவள்ளூர் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி அறிந்த திருவள்ளூர் தாலுகா இன்ஸ்பெக்டர் கமலஹாசன் விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க சப் இன்ஸ்பெக்டர் ராஜாராமனுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் இன்ஸ்டாகிராமில், கஞ்சா புகைப்பது போன்ற வீடியோவை பதிவிட்டது திருவள்ளூர் அருகே உள்ள திருப்பாச்சூர் அந்தோணியார் நகரை சேர்ந்த 19 வயது வாலிபர் என்பதும், தனியார் கம்பெனியில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நேரில் சென்று விசாரித்தபோது, அந்த வாலிபர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதனால் வாலிபரிடம் சோதனை செய்தபோது அவர் அணிந்திருந்த டவுசரில் சுமார் 40 கிராம் கஞ்சா மற்றும் கத்தி, செல்போன் வைத்திருப்பது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்து, வாலிபரை கைது செய்தனர்.

The post கையில் பெரிய கத்தியுடன் கஞ்சா புகைக்கும் வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது: செல்போன் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: