ராட்டினத்தில் இருந்து விழுந்து வாலிபர் பலி

ஏற்காடு: தமிழகத்தில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றும் பிரபல தனியார் நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் 53 பேர், நேற்று காலை சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு சுற்றுலா சென்றனர். அவர்கள் மலை உச்சியில் உள்ள சேர்வராயன் கோயிலுக்கு சென்றனர். அப்போது, அங்குள்ள ராட்சத ராட்டினத்தில் சிலர் ஏறி சுற்றியுள்ளனர்.

கோவை கிளையில் பணிபுரியும் கோகுலகிருஷ்ணன்(23), மாரியப்பன்(35) ஆகிய இருவரும், ஒரே பெட்டியில் ஒன்றாக அமர்ந்து சுற்றியுள்ளனர். ராட்டினம் வேகமாக மேலே சென்று வந்தபோது, திடீரென கோகுலகிருஷ்ணன் மற்றும் மாரியப்பன் இருந்த பெட்டிகளில் இருந்து ஒருவர்பின் ஒருவராக தவறி கீழே விழுந்தனர். இதில் கோகுலக்கண்ணன் பரிதாபமாக இறந்ததார். மாரியப்பனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post ராட்டினத்தில் இருந்து விழுந்து வாலிபர் பலி appeared first on Dinakaran.

Related Stories: