இந்த நிலையில், நீலகிரி, கோவை உள்பட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் அறிவித்து சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்கள் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 4 நாட்களுக்கு 50 கி.மீ., வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
The post தமிழகத்தில் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு: கோவை, நீலகிரிக்கு மஞ்சள் அலர்ட் appeared first on Dinakaran.
