தமிழ்நாட்டின் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 19 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென்தமிழகம், வட தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இன்று முதல் 7 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி, தமிழ்நாட்டின் நாகப்பட்டினம், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், திருவாரூர், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, அரியலூர், கள்ளக்குறிச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டின் 19 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, தருமபுரி, கிருஷ்ணகிரி, குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சீர்காழியில் 24 செ.மீ., மழைப்பதிவாகியுள்ளது. சிதம்பரத்தில் 23 செ.மீ., வேளாங்கண்ணியில் 22 செ.மீ., திருவாரூர், நாகையில் தலா 21 செ.மீ., மழைப்பதிவாகியுள்ளது. கொள்ளிடம், புவனகிரியில் தலா 19 செ.மீ., நன்னிலத்தில் 17 செ.மீ., மழைப்பதிவாகியுள்ளது.

The post தமிழ்நாட்டின் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 19 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: