நடிகராக மட்டுமல்லாது திரைக்கதையாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், நடன அமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்குகின்றார். இந்திய திரைத்துறைக்கு ஆற்றிய பணிக்காக பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் சத்தியபாமா பல்கலைக்கழகம் கமல்ஹாசனுக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்தது.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X தளத்தில் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்; கலையுலகில் சாதனைகள் பல படைக்கும் கலைஞானி – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! நலம் சூழ வாழிய பல்லாண்டு! என்று பதிவிட்டுள்ளார்.
The post உலகநாயகன் கமல் ஹாசனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து! appeared first on Dinakaran.