பிளவு என்பது கொள்கை ரீதியாக இருக்க வேண்டும் தனி மனிதர்களால் முறிந்த அதிமுக, பாஜ கூட்டணி: கே.எஸ்.அழகிரி தாக்கு

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் துறை சார்பாக சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும்-முக்கியத்துவமும் குறித்த கருத்தரங்கம் சென்னை காமராஜர் அரங்கத்தில் நேற்று நடந்தது. கருத்தரங்கிற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் துறை தலைவர் டி.ஏ.நவீன் முன்னிலை வகித்தார்.

கருத்தரங்கில் தி.க.தலைவர் கி.வீரமணி, திமுக தலைமை செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், மதிமுக பொது செயலாளர் வைகோ, கோவா மாநில பொறுப்பாளர் மாணிக்கம் தாகூர், சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, தவாக தலைவர் வேல்முருகன் ஆகியோர் பேசினர்.

கருத்தரங்கில் பேசியகே.எஸ்.அழகிரி,‘‘ பிளவு என்பது கொள்கை ரீதியாக இருக்க வேண்டும். எங்களுக்கு பாஜக கொள்கை பிடிக்கவில்லை என்று சொல்லி அதிமுக வெளியே வந்து இருந்தால் அது போற்றுதலுக்குரிய ஒரு விஷயம். தனி மனித விரோதம் நீடிக்காது. அது சரியும் அல்ல. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, துணை தலைவர் கோபண்ணா, பொது செயலாளர்கள் கே.சீரஞ்சிவி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post பிளவு என்பது கொள்கை ரீதியாக இருக்க வேண்டும் தனி மனிதர்களால் முறிந்த அதிமுக, பாஜ கூட்டணி: கே.எஸ்.அழகிரி தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: