சீனாவின் ஹார்பின் நகரில் களைகட்டிய பனிச்சிற்ப திருவிழா: எழில் கொஞ்சும் பனிச் சிற்பங்களைக் காண மக்கள் படையெடுப்பு!!

பெய்ஜிங்: சீனாவின் குளிர் பிரதேசமான ஹார்பின் நகரில் நடைபெற்று வரும் பனிச்சிற்ப திருவிழாவை காண மக்கள் படையெடுத்து வருகின்றனர். சீனாவில் ஹார்பின் நகரில் ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் பனிச்சிற்ப திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு புத்தாண்டையொட்டி தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்ததால் நாடு முழுவதும் இருந்து ஏராளமானோர் ஹார்பின் நகரில் குவிந்தனர். மொத்தம் 8,10,000 அடி சதுரடியில் பனிக்கட்டியை செதுக்கப்பட்ட சிற்பங்கள் பல வண்ணங்களில் ஜொலித்து காண்போரை மெய்சிலிர்க்க வைத்தனர்.

கடந்த 2018ம் ஆண்டுக்கு பின் நாள் ஒன்றுக்கு 18,500 பேர் வந்த நிலையில் இந்த ஆண்டு 30,000 பேர் வருவதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். பனிச்சிற்ப திருவிழாவை ஒட்டி ஹார்பின் நகரில்இருந்த அனைத்து ஓட்டல்களும் நிரம்பி வழிகின்றன. திருவிழாவுக்கான டிக்கெட்டுகளும் ஆன்லைனில் விற்று தீர்ந்து விட்டன. நாளுக்கு நாள் கூட்டம் அலைமோதுவதால் சுற்றுலா மூலம் வரும் வருவாயும் கணிசமாக உயர்ந்துள்ளது.

The post சீனாவின் ஹார்பின் நகரில் களைகட்டிய பனிச்சிற்ப திருவிழா: எழில் கொஞ்சும் பனிச் சிற்பங்களைக் காண மக்கள் படையெடுப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: