2014 முதல் 2022 ஆம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகள் வழங்குவதற்கான பணிகள் நடைபெறுகிறது: தமிழக அரசு தகவல்

சென்னை: 2014 முதல் 2022 ஆம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகள் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நெடுந்தொடர்கள் அதில் பங்கேற்கும் நடிகர்,நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை துறை விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

சிறந்த நெடுந்தொடருக்கு முதல் பரிசாக 2 லட்சமும், இரண்டாம் பரிசாக ஒரு லட்சமும், நினைவு பரிசும் வழங்கப்படுகிறது. 2009 முதல் 2013 ஆம் ஆண்டு வரை உள்ள ஐந்து ஆண்டுகளுக்கு 101 கலைஞர்களுக்கு கடந்த 04/09/ 2022 அன்று கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் விருதுகள் வழங்கப்பட்டு விட்டது. 2014 முதல் 2022 ஆம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகள் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 2014 முதல் 2022 ஆம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகள் வழங்குவதற்கான பணிகள் நடைபெறுகிறது: தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: