தென்னிந்திய பகுதியில் வளி மண்டல சுழற்சி 12ம் தேதி வரை மழை நீடிக்கும்: வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரமாகியுள்ளது. அதன் காரணமாக அனேக இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்றும் அனேக இடங்களில் மழை பெய்துள்ளது. குறிப்பாக கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகள், நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், காஞ்சிபுரம், திருத்தணி, ஆர்.கே.பேட்டை பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. இந்நிலையில், தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளதால் கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மாவட்டங்களின் மலைப் பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதன் தொடர்ச்சியாக 12ம் தேதி வரை மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post தென்னிந்திய பகுதியில் வளி மண்டல சுழற்சி 12ம் தேதி வரை மழை நீடிக்கும்: வானிலை மையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: