தோல்வியில் அண்ணாமலை பித்துப்பிடித்து பேசி வருகிறார்: எஸ்டிபிஐ கண்டனம்

சென்னை: அதிமுக கூட்டணி-எஸ்டிபிஐ குறித்து அண்ணாமலையின் அவதூறு பேச்சுக்கு எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கை: நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக்கொள்ள மனமில்லாத நிலையில், தமிழக வாக்காளர்களால் தனது மனக்கோட்டை தகர்ந்து விட்ட நிலையில், தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை பித்துப் பிடித்தது போல பேசி வருகிறார்.

பாஜவுக்கு எதிரான மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள இயலாமல், பிற கட்சிகளை அவர் விமர்சித்து வருகிறார். அந்த வகையில் அவர் அதிமுக கூட்டணி நிலைப்பாடு குறித்தும் எஸ்டிபிஐ கட்சி குறித்தும் அவதூறாக பேசியுள்ளார். அவரின் பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன்.

நாட்டு மக்களிடையே வெறுப்பை விதைக்கும், ஜனநாயகத்தை சிதைத்து பாசிச திட்டங்களால் மக்களை துன்புறுத்தும் பாஜ என்கிற கட்சியில் இருந்து கொண்டு, எஸ்டிபிஐ கட்சியை அவதூறாக பேச பாஜவின் அண்ணாமலைக்கு எவ்வித அருகதையும் இல்லை. தமிழக வாக்காளர்கள் தெளிவானவர்கள், ஒருபோதும் அண்ணாமலை போன்ற அரசியல் கோமாளிகளின் பேச்சுகளை பொருட்டாக கருதி, பாஜவை ஆதரிக்கும் அபாய நிலைக்கு செல்ல மாட்டார்கள். பொய்யை உண்மைப் போல பேசினால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்கிற அண்ணாமலையின் பொய் உருட்டல்களை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

The post தோல்வியில் அண்ணாமலை பித்துப்பிடித்து பேசி வருகிறார்: எஸ்டிபிஐ கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: