சில்லி பாயின்ட்…

* தென் ஆப்ரிக்க அணியுடனான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் சீனியர் வீரர்கள் ரோகித் ஷர்மா, விராத் கோஹ்லிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணி 3 கேப்டன்களின் தலைமையில் விளையாட உள்ளது. டெஸ்ட் தொடரில் ரோகித், ஒருநாள் போட்டிகளுக்கு கே.எல்.ராகுல், டி20ல் சூரியகுமார் கேப்டனாக செயல்பட உள்ளனர்.
* விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டித் தொடரின் இ பிரிவு லீக் ஆட்டத்தில், தமிழ்நாடு அணியுடன் நேற்று மோதிய பஞ்சாப் அணி 76 ரன் வித்தியாசத்தில் வென்றது. பஞ்சாப் 45.2 ஓவரில் 251 ரன் (பிரப்சிம்ரன் 58, மன்தீப் 68, அபிஷேக் 38, சித்தார்த் 29, நெஹல் 25); தமிழ்நாடு 34.2 ஓவரில் 175 ரன் ஆல் அவுட் (கேப்டன் தினேஷ் கார்த்திக் 93, இந்திரஜித் 25).
* வங்கதேச அணியுடனான முதல் டெஸ்டில் நியூசிலாந்து அணி தோல்வியின் பிடியில் சிக்கியுள்ளது. இப்போட்டியின் முதல் இன்னிங்சில் வங்கதேசம் 310 ரன், நியூசிலாந்து 317 ரன் எடுத்தன. வங்கதேசம் 2வது இன்னிங்சில் 338 ரன் குவித்து ஆல் அவுட்டானது. 332 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து, 4ம் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 113 ரன் எடுத்துள்ளது. டேரில் மிட்செல் 44 ரன், ஈஷ் சோதி 7 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 3 விக்கெட் மட்டுமே இருக்க, இன்னும் 219 ரன் தேவை என்ற நிலையில் நியூசி. இன்று கடைசி நாள் சவாலை சந்திக்கிறது.
* நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட உள்ள வங்கதேச அணியின் கேப்டனாக நஜ்முல் உசைன் ஷான்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Related Stories: