இங்கிலாந்துக்கு எதிராக அமெரிக்கா திணறல்

பிரிட்ஜ்டவுன்: இங்கிலாந்து அணியுடனான சூப்பர்-8 சுற்று ஆட்டத்தில் (பிரிவு 2), அமெரிக்க அணி ரன் குவிக்க முடியாமல் திணறியது. கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஸ்டீவன் டெய்லர், ஆண்ட்ரீஸ் கவுஸ் இணைந்து அமெரிக்க இன்னிங்சை தொடங்கினர். கவுஸ் 8, டெய்லர் 12 ரன்னில் வெளியேறினர். கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் 10 ரன், நிதிஷ் குமார் 30 ரன் (24 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி அடில் ரஷித் சுழலில் கிளீன் போல்டாகினர்.

அமெரிக்கா 10.4 ஓவரில் 67 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில், கோரி ஆண்டர்சன் – மிலிந்த் குமார் இணைந்து ஸ்கோரை உயர்த்த போராடினர். அமெரிக்க அணி ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில், வெற்றி கட்டாயம் என்பதுடன் ரன் ரேட்டையும் அதிகரிக்க வேண்டிய நெருக்கடியுடன் இங்கிலாந்து இப்போட்டியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

The post இங்கிலாந்துக்கு எதிராக அமெரிக்கா திணறல் appeared first on Dinakaran.

Related Stories: