பரபரப்பான ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீசை வீழ்த்திய தெ.ஆப்ரிக்கா அரையிறுதிக்கு தகுதி

நார்த்சவுன்ட்: டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 சுற்றில் குரூப் 2 பிரிவில் இன்று நடந்த கடைசி லீக் போட்டியில், தென்ஆப்ரிக்கா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற தென்ஆப்ரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த வெ.இண்டீஸ் அணியில் ஷாய் ஹோப் சந்தித்த முதல் பந்திலேயே டக்அவுட் ஆனார். பூரன் 1,கைல் மேயர்ஸ், 35, கேப்டன் ரோவ்மேன் பவல் 1,ஷெர்பேன் ரதர்ஃபோர்ட் 0, ரஸ்சல் 15 ரன்னில் வெளியேற அதிகபட்சமாக ரோஸ்டன் சேஸ் 42 பந்தில் 52 ரன் அடித்தார்.20 ஓவரில் வெ.இண்டீஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 135 ரன் எடுத்தது. தென்ஆப்ரிக்கா பவுலிங்கில் தப்ரைஸ் ஷம்சி 3, மகராஜ், ரபாடா, ஜான்சன், மார்க்ரம் தலா ஒருவிக்கெட் எடுத்தனர்.

பின்னர் களம் இறங்கிய தெ.ஆப்ரிக்க அணியில் ரீசா ஹென்ட்ரிக்ஸ் ரன்எதுவும் எடுக்காமலும், டிகாக் 12 ரன்னிலும் ரஸ்சல் பந்தில் அவுட் ஆகினர். 2 ஓவரில் 2 விக்கெட் இழந்த 12ரன் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் தடைபட்டது. ஒரு மணிநேரத்திற்கு பின்னர் 17 ஓவரில் 123ரன் என்ற இலக்குடன் ஆட்டம் தொடங்கியது. கேப்டன் மார்க்ரம் 18, கிளாசென் 22 ரன்னில் அல்சரி பந்தில் கேட்ச் ஆகினர். பின்னர் வந்த டேவிட் மில்லர் 4 ரன்னில் சேஸ் பந்தில் போல்டானார். 27 பந்தில் 4 பவுண்டரியுடன் 29 ரன் எடுத்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ், சேஸ்பந்தில் கேட்ச் ஆனார். 100 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்த நிலையில் 22 பந்தில், 23 ரன் என்ற பரபரப்பான நிலை ஏற்பட்டது. சேஸ் வீசிய 16வது ஓவரின் 2வதுபந்தில் மகராஜ் (2ரன்) கேட்ச் ஆனார்.

கடைசி ஓவரில் 5 ரன் தேவைப்பட்ட நிலையில் மெக்காய் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் மார்கோ ஜான்சன் சிக்சர் அடித்தார். இதனால் 16.1 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 124 ரன் எடுத்த தென்ஆப்ரிக்கா 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 3வது வெற்றியுடன் முதலிடம் பிடித்த அந்த அணி டி.20 உலக கோப்பையில், 10 ஆண்டுக்கு பின் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. கடைசிவரை போராடி வெஸ்ட்இண்டீஸ் வெளியேறியது. இதே பிரிவில் இங்கிலாந்து அணி நேற்றிரவு அமெரிக்காவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2வது வெற்றியை பெற்றது. இதனால் 4 புள்ளிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் வெஸ்ட்இண்டீசை பின்னுக்கு தள்ளி 2வது இடம்பிடித்து அரையிறுதிக்குள் நுழைந்தது.

The post பரபரப்பான ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீசை வீழ்த்திய தெ.ஆப்ரிக்கா அரையிறுதிக்கு தகுதி appeared first on Dinakaran.

Related Stories: