கேப்டன் ரோகித் அதிரடி அரை சதம்


ஐசிசி உலக கோப்பை டி20 தொடரின் சூப்பர்-8 சுற்று முதல் பிரிவில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் நேற்று மோதின. செயின்ட் லூசியா, டேரன் சம்மி அரங்கில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் முதலில் பந்துவீச முடிவு செய்தார். கேப்டன் ரோகித் ஷர்மா, விராத் கோஹ்லி இணைந்து இந்திய இன்னிங்சை தொடங்கினர். 5 பந்துகளை எதிர்கொண்ட கோஹ்லி டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். அடுத்து ரோகித்துடன் ரிஷப் பன்ட் இணைந்தார். மிட்செல் ஸ்டார்க் வீசிய 3வது ஓவரை சந்தித்த ரோகித் சிக்சரும் பவுண்டரியுமாக (6, 6, 4, 6, 0, 1W, 6) விளாசித் தள்ள, அந்த ஓவரில் மட்டும் 29 ரன் கிடைத்தது.

தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரோகித் 19 பந்தில் அரை சதம் அடித்து அசத்தினார். நடப்பு உலக கோப்பையில் அடிக்கப்பட்ட அதிவேக அரை சதமாக இது அமைந்தது. ரோகித் – பன்ட் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 87 ரன் சேர்த்தது. பன்ட் 15 ரன் எடுத்து ஸ்டாய்னிஸ் வேகத்தில் ஹேசல்வுட் வசம் பிடிபட்டார். இந்தியா 9 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 92 ரன் எடுத்திருந்தது. ரோகித் 79 ரன் (32 பந்து, 5 பவுண்டரி, 8 சிக்சர்), சூரியகுமார் யாதவ் 6 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

The post கேப்டன் ரோகித் அதிரடி அரை சதம் appeared first on Dinakaran.

Related Stories: