சில்லி பாயின்ட்…

* ஐசிசி யு-19 உலக கோப்பை தொடருக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடைபெற உள்ள இந்த தொடரின் (ஜன.13 – பிப்.4) ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் ஜன.14ம் தேதி வங்கதேசத்துடன் மோதுகிறது. மொத்தம் 16 அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் மோத உள்ளன. இதையடுத்து, ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகள் 2 பிரிவாக சூப்பர் சிக்ஸ் சுற்றில் பங்கேற்கும். இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

* மெக்சிகோ ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியா தகுதி பெற்றார். காலிறுதியில் பெலாரசின் விக்டோரியா அசரென்காவுடன் மோதிய கார்சியா 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்றார். மரியா சாக்கரி (கிரீஸ்), கரோலின் டோல்ஹைடு, சோபியா கெனின் (அமெரிக்கா) ஆகியோரும் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளனர்.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Related Stories: