திட்டக்குழு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் திட்டக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகின்ற 23ம் தேதி நடைபெற இருந்தது. இதனை முன்னிட்டு, மாவட்ட ஊராட்சி பகுதியில் இருந்து 8 பேரும், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் இருந்து 4 பேரும் என திட்டக்குழு உறுப்பினர்களாக போட்டியிட விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் இவர்களை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டவர்கள் மட்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி மாவட்ட ஊராட்சி பகுதியிலிருந்து மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களாக வார்டு எண் 2 விஜயகுமாரி சரவணன், வார்டு எண் 6 சுதாகர், வார்டு எண் 9 ராமஜெயம், வார்டு எண் 11 அருண்ராம், வார்டு எண் 18 சரஸ்வதி சந்திரசேகர், வார்டு எண் 19 இந்திரா குணசேகர், வார்டு எண் 20 சதீஷ்குமார், வார்ட்டு எண் 23 ரவி ஆகியோரும், அதே போல் நகர்ப்புற உள்ளாட்சியிலிருந்து திட்டக்குழு உறுப்பினர்களாக ஆவடி மாநகராட்சி வார்டு எண் 17 ஷீலா, திருத்தணி நகராட்சி வார்டு எண் 4 ஷியாம் சுந்தர், ஊத்துக்கோட்டை பேரூராட்சி வார்டு எண் 4 அபிராமி, நாரவாரிகுப்பம் பேரூராட்சி வார்டு எண் 5 தெய்வானை கபிலன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவித்துள்ளார்.

The post திட்டக்குழு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: