குளித்தலை வட்டாரத்தில் அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்க்க விழிப்புணர்வு பிரசாரம்-துண்டு பிரசுரம் விநியோகம்

குளித்தலை : குளித்தலை வட்டாரத்தில் அரசு பள்ளியில் நம் குழந்தைகளை சேர்ப்போம், நமது எதிர்காலத்தை திட்டமிடுவோம் விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வட்டார கல்வி அலுவலர் ரமணி தொடங்கி வைத்தார்தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பள்ளி கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கிராமப்புற நகர்ப்புறத்தில் இருக்கும் மாணவர்கள் அதிக அளவில் அரசு பள்ளியில் சேர்க்க வேண்டி நம் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்போம் நமது எதிர்காலத்தை திட்டமிடுவோம் என பொதுமக்களுக்கும் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை அச்சிட்டு பள்ளிக்கல்வித்துறை உத்தரவின் பேரில் அனைத்து கிராமப்புற நகர்புறங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்டிருந்தனர்.

அதன் படி கரூர் மாவட்டம் குளித்தலை வட்டார கல்வித்துறை சார்பில் பிரசார வாகனத்தில் துண்டு பிரசுர விநியோகத்தை வட்டார கல்வி அலுவலர் ரமணி தொடங்கி வைத்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராகு காலம், பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மஞ்சுளா, இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர், எண்ணும் எழுத்தும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து குளித்தலை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கடம்பர் கோவில் நடுநிலைப்பள்ளி, மணத்தட்டை, வதியம் வீரவல்லி, கே. பேட்டை, சீக்கம்பட்டி, வைபுதூர், சத்தியமங்கலம், அய்யர் மலை, சிவாயம் மேற்கு உள்ளிட்ட பகுதியில் உள்ள பொது மக்களை சந்தித்து தமிழக கல்வித்துறை பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் சலுகைகள் குறித்து துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது.

இதில், தேன்சிட்டு எனும் சிறார் இதழ் நூலகத்திற்கென்று தனி நேரம் இதழ்களின் படைப்புகளில் இருந்து வினாடி வினா போட்டிகள், திரைப்பட ரசனையும் விமர்சனம் பார்வையும் வளர்க்க பள்ளிதோறும் சிறார் திரைப்பட விழாக்கள், இலக்கிய ஆர்வத்தை வளர்க்க பேச்சு கட்டுரை போட்டிகள் உட்பட இலக்கிய மன்ற செயல்பாடுகள், அரசியல் சாசனம் வலியுறுத்தும் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் வானவில் மன்றம் அமைப்பது.

பள்ளி அளவில் தொடங்கி மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள், ஆட்டக் கலைகள் இசை நாடகம் நடனம் ஓவியம் உள்ளிட்ட அனைத்து கலைகளிலும் பள்ளியில் பயிற்சி பள்ளி தொடங்கி மாநில அளவில் கலைத்திருவிழா, ஆண்டுதோறும் மாநில அளவிலான கலை திருவிழா சிறார் திரைப்பட திருவிழா சிறார் இலக்கியத் திருவிழா விளையாட்டுப் போட்டிகள் வானவில் மன்ற போட்டிகள் வினாடி வினா போட்டிகள் ஆகியவற்றை வென்ற மாணவர்களுக்கு வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அறிவித்திருக்கிறது.

பள்ளி நேரம் முடிந்த பின்பும் கற்க விரும்பும் மாணவர்களுக்கென இல்லம் தேடி கல்வித் திட்டம், ஒரு பள்ளியிலும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வேலை வாய்ப்பு வழிகாட்டி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு மாணவர்கள் விரும்பிய துறையை தேர்ந்தெடுக்க உதவி புரிவது, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கென தனி சிறப்பு மையங்கள் அவர்கள் மற்ற மாணவர்களோடு பள்ளியில் இணைந்து கல்வி கற்கலாம் என்ற நிலை, துண்டு பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்டு சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள வீடுகள் தோறும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர்.

The post குளித்தலை வட்டாரத்தில் அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்க்க விழிப்புணர்வு பிரசாரம்-துண்டு பிரசுரம் விநியோகம் appeared first on Dinakaran.

Related Stories: