சதத்தை தவற விட்டதால் கவலை இல்லை: ஜெய்ஸ்வால் மாஸ் பேட்டி

ஐதராபாத்: இந்தியா-இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 246 ரன்னுக்கு ஆல்அவுட் ஆன நிலையில் இந்தியா 2வது நாள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 421 ரன் எடுத்து வலுவான முன்னிலை பெற்றிருந்தது. இந்நிலையில் 80 ரன்னில் அவுட் ஆகி சதத்தை தவறவிட்ட ஜெய்ஸ்வால் நேற்று ஆட்டம் முடிந்த பின்னர் கூறியதாவது: “சதம் அடித்திருந்தால் மிகவும் சிறப்பான ஒன்றாக இருந்திருக்கும். இந்தியாவில் நான் விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி இது என்பதால் கூடுதல் சிறப்பு. ஆனால் நான் சதம் குறித்து யோசிக்கவில்லை. நான் எப்படி ரன்கள் அடிப்பது என்பது குறித்துதான் யோசித்து இருந்தேன். நான் அதை நோக்கிதான் விளையாடினேன்.

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடர் விளையாடியபோது அது வேறு விதமான சூழலாக இருந்தது. தற்போது இந்தியாவில் விளையாடுவது முற்றிலும் வேறுபட்ட ஒரு சூழலாக இருக்கிறது. நான் எல்லா இடங்களிலும் என் விளையாட்டை ரசித்துதான் விளையாடுகிறேன். மேலும் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்த கிடைக்கும் எல்லா வாய்ப்பும் பெருமையானது. ஒரு கட்டத்தில் ஜோ ரூட் பந்தை வீசப் போகிறார் என்பது எனக்கு தெரியும். அவர் முதலில் வந்து பந்து வீசும்போது நான் அதற்கு தயாராக இருந்தேன். ஆனால் நான் முன்பே சொன்னது போல என்னால் முடிந்ததை நினைத்ததை செய்திருக்கிறேன். நான் சில சமயங்களில் தவறு செய்து வெளியேறலாம். ஆனால் நான் இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறேன். தவறுகளில் இருந்து நான் கற்றுக் கொள்வேன்” என்றார்.

The post சதத்தை தவற விட்டதால் கவலை இல்லை: ஜெய்ஸ்வால் மாஸ் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: