* இலங்கை – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி, காலே சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று காலை 10.00 மணிக்கு தொடங்குகிறது.
* இலங்கை: தனஞ்ஜெயா டி சில்வா, தினேஷ் சண்டிமால், அசிதா பெர்னாண்டோ, ஒஷதா பெர்னாண்டோ, விஷ்வா பெர்னாண்டோ, பிரபாத் ஜெயசூரியா, திமத் கருணரத்னே, லாகிரு குமாரா, ஏஞ்சலோ மேத்யூஸ், ரமேஷ் மெண்டிஸ், குசால் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், பதும் நிசங்கா, மிலன் ரத்னாயகே, சதீரா சமரவிக்ரம, ஜெப்ரி வாண்டர்சே.
* நியூசிலாந்து: டிம் சவுத்தீ (கேப்டன்), டாம் பிளண்டெல், மைகேல் பிரேஸ்வெல், டெவன் கான்வே, மேட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், வில்லியம் ஓ’ரூர்கே, அஜாஸ் படேல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவிந்த்ரா, மிட்செல் சான்ட்னர், பென் சியர்ஸ், கேன் வில்லியம்சன், வில் யங்.
* ஆப்கானிஸ்தான் – தென் ஆப்ரிக்கா அணிகளிடையே மொத்தம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் ஷார்ஜாவில் நடைபெற உள்ளது. முதல் போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 5.30க்கு தொடங்குகிறது. 2வது மற்றும் 3வது போட்டி செப். 20, 22ல் நடைபெற உள்ளன.
* இந்தியா – சீனா மோதிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி பைனலின்போது பாகிஸ்தான் அணி வீரர்கள் சீன கொடியை ஏந்தி அந்த அணிக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். இது சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அரையிறுதியில் பாகிஸ்தான் சீன அணியிடம் மண்ணைக் கவ்வியது குறிப்பிடத்தக்கது.
The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.