சங்ககிரி அருகே லாரி மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்த வழக்கில் ஓட்டுநர் கைது

சேலம்: சங்ககிரி அருகே லாரி மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் 6பேர் உயிரிழந்த வழக்கில் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். தப்பியோடிய லாரி ஓட்டுநர் ஜெகன்பாபுவை காவல்துறையினர் கோவையில் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சின்னகவுண்டணூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது 8 நபர்களுடன் வந்த ஆம்னி வேன் மோதி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் படுகாயமடைந்த ஓட்டுநர் விக்னேஷ் மற்றும் பிரியா ஆகியோரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இருவர் பலத்த காயமடைந்த நிலையில், செல்வராஜ், மஞ்சுளா, ஆறுமுகம், பழனிசாமி, பாப்பாத்தி மற்றும் 1 வயது குழந்தை உள்ளிட்ட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீசார் மேற்கொண்ட விசாரணையில் விபத்தில் உயிரிழந்தவர்கள் ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் சேலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்து சென்றுவிட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்த போது விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில் சங்ககிரி அருகே லாரி மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் 6பேர் உயிரிழந்த வழக்கில் விபத்தை ஏற்படுத்திவிட்டு கோவைக்கு தப்பிச்சென்ற ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஓட்டுநர் ஜெகன் பாபு என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

The post சங்ககிரி அருகே லாரி மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்த வழக்கில் ஓட்டுநர் கைது appeared first on Dinakaran.

Related Stories: