தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இணைந்து ஒரு வருட தொழிற்பழகுநர் பயிற்சிக்காக விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டான்ஜெட்கோ), மத்திய தொழிற்பழகுநர் பயிற்சி வாரியத்துடன் இணைந்து ஒரு வருட தொழிற்பழகுநர் பயிற்சிக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டான்ஜெட்கோ), மத்திய தொழிற்பழகுநர் பயிற்சி வாரியத்துடன் (தென் மண்டலம் – சென்னை) இணைந்து பட்டய பொறியியலில் (இன்ஜினியரிங் – எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் & இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ்/கம்ப்யூட்டர் சயின்ஸ் & இன்ஜினியரிங், தகவல் தொழில்நுட்பம், சிவில் இன்ஜினியரிங் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பட்டயப் படிப்பில் (டிப்ளமோ) 2020, 2021, 2022 மற்றும் 2023-ம் வருடங்களில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டில் வசிக்கும் மாணவர்களிடம் இருந்து, ஒரு வருடம் தொழிற்பழகுநர் பயிற்சிக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேற்கூறிய தகுதி உள்ள மாவணவர்கள் Online-ல் விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு www.boat-srp.com (News & Events) என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி. 31.07.2024.

The post தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இணைந்து ஒரு வருட தொழிற்பழகுநர் பயிற்சிக்காக விண்ணப்பங்கள் வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: