மணல் அள்ளும் விவகாரம் ஒன்றிய அரசால் தமிழகத்தில் கட்டுமான தொழில்கள் பாதிப்பு: பொன்குமார் பேட்டி

சேலம்: சேலத்தில் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக ஆட்சியில், 20 லட்சம் தொழிலாளர்கள் வாரியத்தில் இருந்து வெளியே சென்றார்கள். தொடர்ந்து திமுக ஆட்சி வந்த இரண்டரை ஆண்டுகளில், அனைவரையும் மீண்டும் நல வாரியத்தில் சேர்த்துள்ளோம். மாநில அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. ஆனால், ஒன்றிய அரசு இதற்கு ஒத்துழைப்பு வழங்காததுடன், தேவையற்ற இடையூறு செய்கின்றனர். குறிப்பாக, மணல் அள்ளும் விவகாரத்தில், ஒன்றிய அரசு முட்டுக்கட்டை போடுவதால், கட்டுமான தொழில்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கட்டுமானத் தொழில்களை காப்பாற்ற, பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post மணல் அள்ளும் விவகாரம் ஒன்றிய அரசால் தமிழகத்தில் கட்டுமான தொழில்கள் பாதிப்பு: பொன்குமார் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: