மாநிலங்களவை பிற்பகல் அமர்வு நேரம் மாற்றம்

புதுடெல்லி: மதிய உணவு இடைவேளைக்கு பிறகு மாநிலங்களவை கூடும் நேரம் 2.30 மணியிலிருந்து 2 மணிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்தார். இது குறித்து எம்பி.க்களுக்கு ஏன் முன்னறிவிக்கப்படவில்லை என்று திமுக எம்பி திருச்சி சிவாவும், இஸ்லாமியர்கள் தொழுகை முடித்து வர வேண்டும் என்பதற்காக அவையின் மதிய நேரம் 2.30 மணிக்கு தொடங்குவதாக திமுக எம்பி. எம்எம். அப்துல்லாவும் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த அவைத் தலைவர், மதிய உணவு இடைவேளைக்கு பிறகு மக்களவை 2 மணிக்கு தொடங்குகிறது. எனவே மாநிலங்களவையையும் 2 மணிக்கு தொடங்க முன்னரே முடிவு எடுக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

The post மாநிலங்களவை பிற்பகல் அமர்வு நேரம் மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: