ரயில்வே தலைமை நிர்வாக அதிகாரி ஜெயா வர்மா பொறுப்பேற்பு

புதுடெல்லி: ரயில்வே வாரியத்தின் சிஇஓ.வாக இருந்த அனில் குமார் லகோட்டி ஓய்வு பெற்றார். இதையடுத்து அந்த பதவிக்கு ஜெயா வர்மா சின்காவை நியமிக்க ஒன்றிய அமைச்சரவையின் நியமன குழு ஒப்புதல் அளித்தது. ரயில்வேயின் 166 ஆண்டு வரலாற்றில் தலைமை பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். இதற்கு முன்பு, ரயில்வே வாரியத்தின் உறுப்பினராக (செயல்பாடுகள் மற்றும் வணிக மேம்பாடு) பணியாற்றினார். ரயில்வேயில் சரக்கு மற்றும் பயணிகள் சேவைகளின் ஒட்டுமொத்த போக்குவரத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்தார். ஜெயா வர்மா நேற்று ரயில் பவனில் நேற்று தனது பொறுப்புகளை ஏற்று கொண்டார். அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதம் வரை பதவி வகிப்பார்.

The post ரயில்வே தலைமை நிர்வாக அதிகாரி ஜெயா வர்மா பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Related Stories: