உள்ளாட்சி பணி நியமன முறைகேடு பாஜ எம்எல்ஏ வீட்டில் ரெய்டு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில்,கடந்த 2014-2018ம் ஆண்டு வரை உள்ளாட்சி அமைப்புகளுக்கான பணி நியமனங்களில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. நகர்புற மேம்பாடு மற்றும் நகராட்சி துறை அமைச்சர் பிர்கத் ஹக்கீம் மற்றும் எம்எல்ஏவான மதன் மித்ரா ஆகியோரிடம் சிபிஐ நேற்று முன்தினம் விசாரணை நடத்தியது.12 இடங்களிலும் சோதனை நடத்தியது.

இந்நிலையில்,ராணாகாட் தொகுதி பாஜ எம்எல்ஏ பார்த்தசாரதி சட்டர்ஜி வீட்டிலும் நேற்று சிபிஐ சோதனை நடத்தியது. அதேபோல் உலுபெரியா நகராட்சி, டயமண்ட் ஹார்பர் நகராட்சிகளின் முன்னாள் தலைவர்கள் முறையே அர்ஜூன் சர்க்கார், மிரா ஹால்தர் ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடந்தது.மத்தியம்கிராம் நகராட்சியிலும் சிபிஐ குழுவினர் சோதனை நடத்தினர். அதிகாரிகள் கூறுகையில்,‘‘பணி நியமன முறைகேடுகளில் இந்த நபர்களுக்கு தொடர்பு உள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளன. இதில் முக்கிய ஆவணங்களை தேடி சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்றனர்.

The post உள்ளாட்சி பணி நியமன முறைகேடு பாஜ எம்எல்ஏ வீட்டில் ரெய்டு appeared first on Dinakaran.

Related Stories: