மக்கள் பிரச்சனைகளை அவையில் எழுப்ப வேண்டியது எம்.பிக்களின் கடமை : சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ராகுல் காந்தி கடிதம்

டெல்லி : மக்களவையில் தான் ஆற்றிய உரையில் சில பகுதிகள் நீக்கப்பட்டது குறித்து சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், “நாட்டின் களநிலவரம், உண்மைகளையே தான் மக்களவையில் எடுத்துக்கூறினேன். எனது பேச்சின் முக்கிய பகுதிகள் நீக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. காரணமற்ற முறையில் எனது பேச்சின் சில பகுதிகள் நீக்கப்பட்டுள்ளது. எனது பேச்சில் இருந்து சில பகுதிகளை நீக்கியிருப்பது நாடாளுமன்ற ஜனநாயக நெறிமுறைகளுக்கு முரணானது. முழுவதும் குற்றச்சாட்டுகளை கூறிய பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாக்கூரின் பேச்சுகள் நீக்கப்படவில்லை.

சபாநாயகரின் செயல் ஜனநாயகத்துக்கு விரோதமானது .அவை விதி எண் 380-ன் படி நீக்கத் தேவையற்ற பகுதிகளையும் எனது உரையிலிருந்து சபாநாயகர் நீக்கியுள்ளார். நாடாளுமன்ற அவை விதி 380ஐ எந்த வகையிலும் நான் மீறவில்லை. மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையைத்தான் தான் நிறைவேற்றியுள்ளேன். மக்களின் பிரச்னைகளை பேசுவதற்கு ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் உரிமை உள்ளது. அரசமைப்பு சட்டத்தில் 105(1) பிரிவின் கீழ் ஒவ்வொரு, எம்.பி.க்கும் பேச்சுரிமை உள்ளது.மக்கள் பிரச்சனைகளை அவையில் எழுப்ப வேண்டியது எம்.பிக்களின் கடமை. அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் சேர்க்க வேண்டும்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post மக்கள் பிரச்சனைகளை அவையில் எழுப்ப வேண்டியது எம்.பிக்களின் கடமை : சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ராகுல் காந்தி கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: