செய்வதறியாது ஊழியர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால், தீ மளமளவென பரவியதால் உணவகத்தை விட்டு ஊழியர்கள் வெளியே சென்றனர். இதுகுறித்து உணவக ஊழியர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கீரமங்கலம் தீயணைப்பு துறை வீரர்கள் தண்ணீர் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் உணவகம் முற்றிலும் தீயில் எரிந்து சேதமடைந்தது. மேலும், உணவகத்தில் பல லட்சம் பாதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசனமாகின. இந்த தீ விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உணவகத்தில் தீ விபத்து.. பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்..! appeared first on Dinakaran.
