புதுவையில் ஒரே நாளில் டெங்குவுக்கு 2 பேர் பலி

புதுச்சேரி: புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலுக்கு ஒரே நாளில் 19 வயது கல்லூரி மாணவி, பெண் ஊழியர் உயிரிழந்தனர். புதுச்சேரியில் இந்தாண்டு பருவமழை துவங்குவதற்கு முன்னதாகவே டெங்கு பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. கிருமாம்பாக்கம் பகுதியில் கடந்த சில தினங்களாக 10க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்நிலையில் புதுச்சேரி குருமாம்பேட் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி காயத்ரி (19), டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவர் நேற்று உயிரிழந்தார். அதே போல் தர்மாபுரி நடுத்தெருவை சேர்ந்த தனியார் நிறுவன பெண் ஊழியர் ரோஷிணி(28) கடந்த சில தினங்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்தார். புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலுக்கு ஒரே நாளில் 2 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post புதுவையில் ஒரே நாளில் டெங்குவுக்கு 2 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: