போலீஸ் ஜீப் கவிழ்ந்து பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசார் படுகாயம்

பண்ருட்டி: பண்ருட்டி அருகே போலீஸ் ஜீப் கவிழ்ந்து பெண் இன்ஸ்பெக்டர், சிறப்பு எஸ்ஐ மற்றும் போலீஸ்காரர் என மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே வளையமாதேவியில் என்.எல்.சி நில எடுப்பு பணியின் ஒருபகுதியாக அங்கு பரவனாறு புதிய கால்வாய் வெட்டும் பணி நடந்து வருகிறது. அப்பகுதியில் தினமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கடலூர் கலால் இன்ஸ்பெக்டர்
 பிரியா வளையமாதேவி பகுதிக்கு பாதுகாப்பு பணிக்காக சென்று இருந்தார்.

பின்னர் பணியை முடித்துவிட்டு நேற்றிரவு ஜீப்பில் திரும்பி வந்து கொண்டு இருந்தார். ஜீப்பை புதுப்பேட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராமசாமி ஓட்டி வந்தார். நெய்வேலி வழியாக வந்த ஜீப் பண்ருட்டி-கும்பகோணம் சாலையில் மேல்மாம்பட்டு என்ற இடத்தில் வந்தபோது திடீரென கவிழ்ந்துது.

இதில் இன்ஸ்பெக்டர் பிரியா, சிறப்பு உதவி ஆய்வாளர் ராமசாமி, உள்பட மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற பொது மக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.இதன் பேரில் இன்ஸ்பெக்டர் உள்பட மூன்று போலீசாரையும் பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post போலீஸ் ஜீப் கவிழ்ந்து பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசார் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: