ஐரோப்பிய நாடாளுமன்ற பிரதிநிதி தேர்தல்: புதுவையில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் வாக்களிப்பு


புதுச்சேரி: புதுச்சேரி பிரெஞ்சு துணை தூதரகத்தில் ஐரோப்பிய நாடாளுமன்ற பிரதிநிக்கான வாக்குப்பதிவு நடந்தது. இதில் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற புதுவை வாக்காளர்கள் வாக்களித்தனர். ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 720 இடங்களில், 81 இடங்களில் பிரெஞ்சு நாட்டு பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்த பதவிகளுக்கு 38 அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் போட்டியிடுகின்றனர். ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் ஜூன் 6ம் தேதி முதல் 9ம் வரை ஐரோப்பிய தேர்தல் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ஆசியாவின் பிரதான நிலப்பகுதிகளில் உள்ள வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்ட பிரெஞ்சு குடிமக்களுக்கு வாக்குப்பதிவு இன்று நடக்கிறது.

இதில் டெல்லி, மும்பை, கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்ற வருகிறது. அதன்படி புதுச்சேரியில் 2, சென்னையில் 1, காரைக்காலில் 1 என மொத்தமாக 4 வாக்குச்சாவடிகளில் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற 4,546 பேர் வாக்களிக்க உள்ளனர். புதுச்சேரியில் பிரெஞ்சு துணை தூதரகத்தில்இன்று காலை 8 மணி வாக்குபதிவு தொடங்கியது. இதில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.

The post ஐரோப்பிய நாடாளுமன்ற பிரதிநிதி தேர்தல்: புதுவையில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் வாக்களிப்பு appeared first on Dinakaran.

Related Stories: