அதன்படி கடந்த ஜனவரியில் துபாய்,காத்மாண்டு மற்றும் காஷ்மீர் சென்றுள்ளார். பிப்ரவரியில் கேரளா, மார்ச்சில் பாகிஸ்தான், மே மாதத்தில் இந்தோனேசியாவுக்கு 2 வார பயணம் சென்றுள்ளார். மேலும் கடந்த 2023 பிப்ரவரியில் மட்டும் 2 முறை காஷ்மீருக்கு சென்றுள்ளார்.அதைத் தொடர்ந்து ஜூன் மாதம் லேவில் உள்ள பாங்காங் ஏரிக்கு பயணம் மேற்கொண்டார். டிசம்பர் 2024 ல் நேபாளத்திற்கு பயணம் மற்றும் பிப்ரவரி மற்றும் மார்ச் 2024 ல் வங்கதேசம் என அவரது பயணங்கள் தொடர்ந்தன. அதைத் தொடர்ந்து 2024 மார்ச் 30 அன்று பாகிஸ்தான் தூதரகத்திற்கு சென்றார். அதைத் தொடர்ந்து சீனாவிற்கும் (ஜூன் 2024) விஜயம் செய்தார். மேலும் 2024 ஆகஸ்டில், காஷ்மீர், வங்கதேசம், பூடானுக்கும், செப்டம்பர் மாதத்தில் நேபாளத்திற்கும் சென்றுள்ளார். இறுதியாக 2024 நவம்பரில் சீனாவில் உள்ள கைலாஷ் மானசரோவருக்கு சென்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
The post பாக். உளவாளி ஜோதி மல்ஹோத்ரா 5 மாதங்களில் 4 நாடுகளுக்கு பயணம்: டேனிஷை சந்தித்த 17 நாள்களுக்கு பிறகு பாக். சென்றுள்ளார் appeared first on Dinakaran.
