டெல்லி: மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் திமுக நோட்டீஸ் அளித்துள்ளது. 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை ரத்து செய்துவிட்டு விக்சித் பாரத், ஜி ராம்ஜி என்ற பெயரில் செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டது. மக்களவையில் அனைத்து அலுவல்களையும் ஒத்திவைத்து விட்டு விவாதம் நடத்த டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார். புதிய மசோதா மக்களவையில் இன்று அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் திமுக எதிர்ப்பு தெரிவிக்க உள்ளது.
