சென்னை: மசோதாக்களின் பெயர்களை ஹிந்தியில் வைப்பதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கடந்த 2005ம் ஆண்டு, கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ஆண்டில் 100 நாட்கள் வேலை கிடைப்பதை உறுதி செய்ய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு மாற்றாக ‘வளர்ந்த இந்தியா வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கான உத்தரவாத திட்டம் (கிராமப்புறம்) ‘ என்ற திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது.
இதற்கு கடந்த 12ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்த நிலையில் விபி ஜி ராம் ஜி என்று பெயரிடப்பட்ட அந்த மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. விபி ஜி ராம் ஜி மசோதாவில் 100 நாட்களுக்கு பதில் இனிமேல் 125 நாட்கள் ஊதிய வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.அந்த வகையில், மசோதாக்களின் பெயர்களை ஹிந்தியில் 3வைப்பதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடும் எதிர்ப்பு தெரிவித்து
இது குறித்து எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மசோதாக்களின் பெயர்களை இந்தயில் வைப்பது ஹிந்தி பேசாத மக்களுக்கும், மாநிலங்களுக்கும் இழைக்கப்படும் ஒரு அவமதிப்பாகும். இதுவரை, மசோதாவின் பெயர்கள் ஆங்கிலப் பதிப்பில் ஆங்கிலத்திலும், ஹிந்திப் பதிப்பில் ஹிந்தியிலும் எழுதும் நடைமுறை இருந்தன. 75 ஆண்டுகளாகப் அந்த நடைமுறையில் யாரும் எந்தச் சிரமத்தையும் சுட்டிக்காட்டாதபோது, புதிய மாற்றத்தைச் செய்ய வேண்டிய அவசியம் என்ன? இந்த மாற்றத்தால் ஹிந்தி பேசாத மக்களால் சட்டங்களை அடையாளம் காணவும், உச்சரிக்கவும் முடியாது. நமது நாட்டில் ஆங்கிலம் ஒரு துணை அலுவல் மொழியாகத் தொடரும் என்ற வாக்குறுதி மீறப்படும் அபாயம் இருப்பதாக அஞ்சுகிறேன். இவ்வாறு தெரிவித்தார்.
