ரூ.2000 நோட்டுக்கள் 93% வங்கிகளுக்கு திரும்பியது

மும்பை: வங்கிகளில் இதுவரை 93 சதவீத ரூ.2000 நோட்டுக்கள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மே மாதம் 19ம் தேதி புழக்கத்தில் இருக்கும் ரூ.2000 நோட்டுக்கள் திரும்ப பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதனை தொடர்ந்து வங்கிகள் மூலமாக 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறும் நடவடிக்கை தொடங்கியது.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘வங்கிகளில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், ஆகஸ்ட் 31ம் தேதி வரை புழக்கத்தில் இருந்து திரும்ப பெறப்பட்ட 2000 ரூபாய் நோட்டுக்களின் மதிப்பு ரூ.3.32லட்சம் கோடியாகும். ஆகஸ்ட் 31ம் தேதியன்று வணிகம் முடிவடையும்போது புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுக்கள் ரூ.24 ஆயிரம் கோடியாக இருந்தது. மே 19ம் தேதியன்று புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுக்களில் 93 சதவீதம் வங்கிகளுக்கு திரும்பியது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

The post ரூ.2000 நோட்டுக்கள் 93% வங்கிகளுக்கு திரும்பியது appeared first on Dinakaran.

Related Stories: