ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்களிடம் ‘கூகுள் லொகேஷன்’ கேட்க கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

டெல்லி: ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்களிடம் நிபந்தனையாக ‘கூகுள் லொகேஷன்’ குறித்து கேட்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. குற்ற வழக்குகளில் காவல் துறையால் கைது செய்யப்படுவர்கள், சமீபகாலமாக ஜாமீன் பெற வேண்டும் என்றால் சம்மந்தப்பட்ட நபர்களது கூகுள் லொகேஷனை விசாரணை அமைப்புகளிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்படுகிறது. மேலும் நீதிமன்றங்கள் மூலம் ஜாமீன் நிபந்தனையாக விதிக்கப்பட்டு வந்தது.

ஆனால் இதுபோன்ற நடைமுறையானது, அடிப்படை உரிமைகளுக்கு எதிராக இருக்கிறது எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவில், ‘குற்றம்சாட்டப்பட்ட நபர் ஜாமீன் பெறுவதற்கான நிபந்தனையாக கூகுள் லொக்கேஷனை விசாரணை அமைப்புகளிடம், ஜாமீன் பெறுகின்ற நபர் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட முடியாது. எனவே, ஜாமீனில் வெளி வரக்கூடிய நபர்களின் இருப்பிடங்களை கண்காணிக்கும் வகையில் சம்பந்தப்பட்ட நபர்களின் இருப்பிடங்கள் குறித்த கூகுள் லொகேஷன் தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை விதிக்க கூடாது’ என்று உத்தரவிட்டுள்ளது.

 

The post ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்களிடம் ‘கூகுள் லொகேஷன்’ கேட்க கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: