மணிப்பூரில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.. முகாமில் உள்ள மக்களுக்கு ஆறுதல் கூறி, குறைகளை கேட்டறிந்தார்..!!

இம்ப்ஹல்: மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி நேரில் சென்று சந்தித்தார். வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை பார்ப்பதற்காக ராகுல்காந்தி இன்று மணிப்பூர் பயணம் மேற்கொண்டார். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டதால், அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. கிட்டத்தட்ட ஓராண்டாக அங்கு பிரச்னை இருந்து வருவதால், பிரதமர் மோடி ஒருமுறை கூட மணிப்பூருக்கு பயணிக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதனிடையே, மணிப்பூருக்கு இருமுறை ராகுல் பயணம் மேற்கொண்டு, வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துள்ளார்.

சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிவுற்ற பின், மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்றார். நாடாளுமன்றத்திலும் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசை ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில் தலைநகர் டெல்லியில் இருந்து இன்று அதிகாலை அசாமின் சில்சாருக்கு விமானம் மூலம் சென்றடைந்த ராகுல் காந்தி. அசாம் மாநிலத்தின் புலர்டல் பகுதியில் உள்ள நிவாரண முகாமுக்கு சென்ற ராகுல் காந்தி அங்கு தங்க வைக்கப்பட்டவர்கைளை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்த ராகுல் காந்தி அங்கிருந்து மணிப்பூர் சென்றார். மணிப்பூர் மாநிலத்தின் ஜிரிபம் மாவட்ட உயர்நிலை பள்ளிக்கு சென்ற ராகுல் காந்தி அங்குள்ள முகாமில் தங்கியிருந்தவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். வன்முறை காலக்கட்டத்தில் ஏற்கனவே இரண்டு முறை மணிப்பூர் சென்றுள்ள ராகுல் காந்தி தற்போது எதிர்க்கட்சி தலைவரான பிறகு முதல் முறையாக மணிப்பூர் சென்றுள்ளார்.

The post மணிப்பூரில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.. முகாமில் உள்ள மக்களுக்கு ஆறுதல் கூறி, குறைகளை கேட்டறிந்தார்..!! appeared first on Dinakaran.

Related Stories: