×

மீனம்

19.2.2026 முதல் 25.2.2026 வரை

சாதகங்கள்: அத்தனைக் கிரகங்களும் 12 ஆம் இடமான விரயத்தில் இருந்தாலும், குரு பார்வை இருப்பதால், கஷ்டங்கள் கட்டுக்குள் இருக்கும். சுக்கிரனால் ஆதாயம் உண்டு. கையில் உள்ள பணத்தை வீண் செலவு செய்யாமல் ஆபரணங்கள், நிலம் வாங்குவது போன்ற விஷயத்தில் முதலீடு செய்யுங்கள். கையில் இருந்தால், விரயஸ்தானம் பலமாக இருப்பதால், தேவையற்ற செலவுகளில் இழந்துவிட வாய்ப்புண்டு. சுப விரயங்களாக இருந்தால், பிற்காலத்தில் கை கொடுக்கும். தெய்வதரிசனம், யாத்திரைகள் செய்யும் வாய்ப்பு உண்டு.

கவனம் தேவை: வருமானத்தைவிட செலவுகள் சற்று அதிகமாகவே இருக்கும். எனவே வருமானத்தை உணர்ந்து செலவைக் கட்டுப்படுத்தி, கச்சிதமாகச் செய்தால், தப்பிக்கலாம். கடன் வாங்கும் தூண்டுதல் இருந்து கொண்டே
இருக்கும். அதற்கு ஆட்பட வேண்டாம். பத்திரப்பதிவுகளில் கவனம் தேவை.

பரிகாரம்: எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள்.

 

Tags :
× RELATED கும்பம்