(4.7.2026 முதல் 10.7.2026 வரை)
சாதகங்கள்: ஆறில் இருந்த சுகாதிபதி சுக்கிரன் வாரத் தொடக்கத்தில் ஏழாம் இடத்திற்கு வந்து ராசியைப் பார்ப்பது பலம். இரண்டில் சனி இருந்தாலும் அவர் ராசிநாதன் என்பதாலும் அவரை குரு பார்ப்பதாலும் பொருளாதார ரீதியாக பின்னடைவுகள் இருக்காது. முயற்சிகள் பலனளிக்கும். முக்கியஸ்தர்களின் நட்பு கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உதவுவார்கள். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக இருக்கும். நல்ல வேலைக்கு முயற்சித்து வருபவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அதிக உழைப்பு அலைச்சல்கள் இருந்தாலும் அதன் பலன் சாதகமாகவே இருக்கும். சிலர் வேலையை விட்டுவிட்டு தொழிலைத் தொடங்கலாமா என்று யோசிப்பார்கள். நிதானம் தேவை.
கவனம் தேவை: வரவுக்கு மீறிய செலவு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. சிக்கனம் முக்கியம். இரண்டாம் இடத்தில் சனி இருப்பதால் பேச்சில் கவனம் தேவை. தேவையில்லாத விமர்சனங்களையும் கருத்து வேறுபாடுகளையும் தவிர்க்க வேண்டும். உணவு விஷயத்தில் மிகுந்த கவனமாக இருங்கள். அக்காலத்தில் உணவு உண்பதும், தரம் இல்லாத உணவை உண்பதும் பிரச்னைகள் தரும். வாயைக் கட்டுப்படுத்த வேண்டும்.
பரிகாரம்: ராமாயணத்தில் சுந்தரகாண்டம் பகுதியில் ஏதேனும் ஒரு அத்தியாயம் மாலையில் விளக்கு வைத்து படிக்கவும்.
