23.4.2026 முதல் 29.4.2026 வரை
சாதகங்கள்: வீடு, வாகனம் போன்றவற்றில் ஒரு பிரச்னையும் இருக்காது. படிக்கின்றவர்கள் நன்றாகப் படிப்பார்கள் படிப்பில் உற்சாகம் இருக்கும் ராகு 2ஆம் பாவத்தில் இருப்பதால் பணவரவு புதிய வழிகளில் வரும்; மூன்றாமிடத்தில் ராசிநாதன் சனி இருப்பதால் நீங்கள் மிகுந்த மன தைரியத்துடன் செயல்படுவீர்கள். எதையும் பொறுமையுடன் கையாண்டு, கடுமையான உழைப்பின் மூலம் இலக்குகளை அடைவீர்கள். பணியிடத்தில் உங்கள் செயல்பாடு மெதுவாக இருந்தாலும், மிக நேர்த்தியாகவும், பொறுப்பாகவும் இருக்கும். போட்டியாளர்களை வெல்லும் சக்தி கிடைக்கும். நான்காம் இடத்தில் சுக்கிரன் இருப்பதால் வசதி மற்றும் ஆடம்பர வசதிக்கான பொருட்களை வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
கவனம் தேவை: நான்காம் இடம் தாயாருக்கு என்பதால் தாயாருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். மன அமைதி குறையலாம். சுகங்கள் குறையலாம். சிம்மத்தில் கேது 8ஆம் பாவத்தில் இருப்பதால் மறைமுக பயம், திடீர் மாற்றங்கள் ஏற்படும். 3-ம் இடத்தில் இருக்கும் சனி, 5, 9 மற்றும் 12-ம் இடங்களைப் பார்ப்பதால், பூர்வ புண்ணியம், பாக்கியம் மற்றும் செலவுகளில் கவனம் தேவை. எந்த ஒரு செயலிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 25.4.2026 இரவு 8.01 முதல் 28.4.2026 காலை 3.36 வரை சந்திராஷ்டமம் உண்டு.
பரிகாரம்: சனி வழிபாடு மன உறுதியை தரும்.
