×

கன்னி

23.4.2026 முதல் 29.4.2026 வரை

சாதகங்கள்: எட்டாம் இடத்தில் சூரியன் இருப்பதால் பயப்பட வேண்டியதில்லை. 12க்குரியவன் 8ல் மறைவது யோகமாகவே மறைமுகமாக வேலை செய்யும். மறைமுக லாபம் உண்டு. ஆராய்ச்சித் துறைகளில் கவனம் அதிகரிக்கும். புதன் ராசிக்கு உரியவன் என்பதால் அறிவு கூர்மை அதிகரிக்கும். ராகு 6ஆம் பாவத்தில் இருப்பதால் எதிரிகளை ஜெயிக்கும் திறன், போட்டியில் வெற்றி கிடைக்கும்; சிம்மத்தில் கேது 12ஆம் பாவத்தில் இருப்பதால் ஆன்மிகம், தனிமை, வெளிநாட்டு அனுபவம் அதிகரிக்கும். கேந்திராதிபத்திய தோஷம் பெற்ற புதன் நீசம் பெறுவது ஒருவகையில் நல்லது. குரு உங்கள் 6ம் இடத்தைப் பார்ப்பதும். ஆறாம் இடத்தில் ராகு பிரச்னைகளை எதிர்கொள்ளும் ஆற்றலைத் தரும். எதிரிகளை வெல்வதற்கான சக்தி கிடைக்கும். பத்தாம் இடத்தில் குரு இருப்பது நல்ல தொழில் முன்னேற்றத்தையும் உயர்ந்த நிலையை அடையும் வாய்ப்பையும் தரும்.

கவனம் தேவை: உடல் ஆரோக்கியம் கவனம் தேவை. திடீர் மாற்றங்கள் நிகழலாம்.எட்டாம் பாவ சூரியன் காரணமாக எதிர்பாராத பிரச்னைகள் ஏற்படலாம். அரசாங்கம் தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை. விதி மீறல்கள் கண்டிப்பாகத் தவிர்க்கவும். புதன் நீசம் அடைவதால் மன அழுத்தம் அதிகரிக்கலாம். ஏழாம் இடத்தில் சனி வழக்குகள் பிரச்னை சிரமத்தைத் தரும்.

பரிகாரம்: புதன் காயத்ரி ஜபம் உதவும். கோயிலுக்குச் சென்று ஒரு அகல் விளக்கு ஏற்றி வாருங்கள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

Tags : Virgin ,
× RELATED மகரம்