×

விருச்சிகம்

26.3.2026 முதல் 01.04.2026 வரை

சாதகங்கள்: 12 க்குரிய சுக்கிரன் ஆறில் அமர்வது சிறப்பு. விரயங்கள் குறையும். குரு அஷ்டமத்தில் இருந்தாலும் உங்கள் தன குடும்ப ராசியைப் பார்வையிடுகின்றார். எனவே பணச் சிக்கல்கள் இருக்காது. கொடுக்கல் வாங்கல்கள் சுமுகமாக இருக்கும். கடன்கள் பைசலாகும். ராசிநாதன் செவ்வாய் ஐந்தாம் இடத்தில் தொழில் காரகனான சூரியனோடு இணைந்து இருப்பது சிறப்பு. சனி அந்த இடத்தில் இருந்தாலும் பஞ்சமஸ்தானம் பலம் பெறும்.

கவனம்தேவை: நான்காம் இடத்தில் ராகு இருப்பதாலும் ஐந்தாம் இடத்தில் சனி இருப்பதாலும், சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தலையெடுத்து நிம்மதியைக் குறைக்கும். வண்டி வாகனங்களைச் சரியாகப் பராமரிக்க வேண்டும். தாயாரின் உடல்நிலையில் கவனம் தேவை. இரண்டுக்குரிய குரு எட்டில் இருப்பதால், பணம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை மிகுந்த எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். நாணயம் மிகவும் முக்கியம். உணவுப் பழக்கங்களில் அதிக கவனம் தேவை.

சந்திராஷ்டமம்: 25.3.2026 காலை 6.17 முதல் 27.3.2026 காலை 9.36 வரை சந்திராஷ்டமம் உண்டு. பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப்பிரதிவாதங்களில் ஈடுபடவேண்டாம்.

பரிகாரம்: முடிந்தால் ஒரு முறை வைத்தீஸ்வரன் கோயில் செல்லவும். சதுர்த்தி தினம் தவறாமல் விநாயகரை வணங்கவும்.

 

Tags : Scorpio ,
× RELATED மீனம்