×

விருச்சிகம்

23.1.2025 முதல் 29.1.2025 வரை

சாதகங்கள்: பாக்கிய ஸ்தானத்தில் இருந்த செவ்வாய் வக்ரமடைந்து அஷ்டமத்திற்கு வந்திருக்கிறார். அவர் ஆறாமாதி என்பதால் ஒரு விதத்தில் நற்பலன்களைத் தருவார். பெரும்பாலான கிரகங்கள் நல்ல நிலையில் தான் இருக்கின்றன. எனவே கவலைப்படுவதற்கு இல்லை. உங்களுடைய தேவைகள் பூர்த்தியாகும். பொருளாதார நிலை ஏற்றம் பெறும். தெய்வ தரிசனம் கிடைக்கும். கௌரவம் உயரும். ஆறுக்குடையவன் எட்டில் இருப்பதால் பகைகள் மாறும். உறவுகள் சிறக்கும். கருத்து வேறுபாடுகள் குறையும். ஏழுக்குரிய சுக்கிரன் வார இறுதியில் உச்சம் பெறுகின்றார். நினைத்தபடி சுப காரிய முயற்சிகள் பலிக்கும்.

கவனம் தேவை: ராசிநாதன் அஷ்டமத்தில் இருப்பதால் உங்கள் எண்ணங்களை நேர்மறையாக வைத்துக் கொள்ள வேண்டும். சில நேரங்களில் உங்களுக்கு நீங்களே தேவையில்லாத எதிரிகளைச் சம்பாதித்துக் கொள்வீர்கள். சில செயல்களால் கஷ்டங்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள் என்பதால் எதையும் சிந்தித்துச் செய்யவும்.

பரிகாரம்: ராசிநாதன் அஷ்டம ராசியில் இருப்பதால் அவருடைய அனுகூலம் தேவை. விக்கினங்கள் தீர விநாயகரை வழிபடுங்கள்.

Tags : Scorpio ,
× RELATED இந்த வார விசேஷங்கள்