1.1.2026 முதல் 7.1.2026 வரை
சாதகங்கள்: தன, குடும்ப ஸ்தானம் வலுப்பெறுகிறது. குடும்ப ஸ்தானத்திற்கு குரு பார்வை கிடைப்பதால் விரயங்கள் குறையும். இரண்டாம் இடத்தில் சுக்கிரன் அமர்ந்திருப்பதாலும், அவரை குரு பார்ப்பதாலும், பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் குறைவு இருக்காது. கொடுக்கல் வாங்கல்கள் சுலபமாகவே இருக்கும். எப்பொழுதுதோ போட்ட முதலீடு நீங்கள் எதிர்பார்த்த லாபத்தைத் தரும். தொழில் வணிகம் சீராக நடைபெறும். ஆனால், முயற்சிகள் சற்று கூடுதலாக செய்ய வேண்டும்.
கவனம்தேவை: உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையில்லாத கற்பனையான அச்சங்கள் மனதில் உருவாகும் வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படலாம். எனவே உணவு விஷயத்தில் கவனம் தேவை வெளியில் அதிகம் உண்ண வேண்டாம். வாக்கு ஸ்தானத்தில் சூரியன் செவ்வாய் இருப்பதால் இனிமையாக, பேச வேண்டும் என்று நினைத்தாலும் கடுமையான வார்த்தைகள் வரும். வார்த்தைகளில் கவனம் தேவை.
சந்திராஷ்டமம்: 2.1.2026 காலை 9.27 முதல் 4.1.2026 காலை 9.43 வரை சந்திராஷ்டமம் உண்டு. பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
பரிகாரம்: குளித்துவிட்டு பூஜை அறையில் உங்கள் இஷ்ட தேவதை நாமத்தை ஐந்து நிமிடமாவது ஜபம் செய்யுங்கள்.
