×

துலாம்

2.5.2024 முதல் 8.5.2024 வரை

சாதகங்கள்: ராசிநாதன் ராசியைப் பார்வையிடுவது என்பது முதல் நிலை சுப அமைப்பு. தன் வீட்டை தானே பார்க்கின்ற பொழுது அந்த வீட்டிற்கான சுப பலன்கள் அதிகரிக்கின்றன. கஷ்டங்கள் குறைகின்றன. சுக்கிரன் ராசியைப் பார்வையிடுகின்றார். லாபாதிபதி சூரியன் உச்சநிலையில் அவரோடு இணைந்து இருக்கின்றார். பாக்கிய அதிபதி புதனும் அவர்களோடு இணையப் போகின்றார். இந்த கூட்டு கிரகங்கள் ராசியைப் பார்ப்பதால் அறிவுப்பூர்வமான சிந்தனைகள் அதிகரிக்கும். எதையும் கூர்மையோடு செய்யும் ஆற்றல் பிறக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் கருத்து வேற்றுமைகள் மறைந்து அன்னியோன்யம் அதிகரிக்கும். அரசாங்க உதவிகள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். ஆறாம் இடத்தில் உள்ள ராகுவும் செவ்வாயும் சுப காரியங்களை துரிதப்படுத்துவார்கள். மூன்று ஆறுக்குரிய குரு எட்டில் மறைந்திருப்பதும் மறைமுகமான நன்மைதான்.

கவனம் தேவை: விரய ஸ்தானத்தில் கேது இருப்பதால் நீங்கள் சிறு பிரச்னை என்று நினைப்பது பெரிய பிரச்னையாக மாறும் என்பதால் எந்தப் பிரச்னையையும் முளையிலேயே கிள்ளி எறிவது நல்லது. அதற்கு உங்களுக்கு விழிப்புணர்வு தேவை. 5-ம் இடத்தில் சனி அமர்ந்திருப்பதால் முன்னோர்கள் வழிபாட்டையும் குலதெய்வ வழிபாட்டையும் கைவிட வேண்டாம். பூர்வ புண்ணிய ஸ்தானம் சற்று பலம் குறைந்து இருப்பதால் எதிலும் அதிர்ஷ்டத்தை நம்ப வேண்டாம்.

பரிகாரம்: முருகனை வழிபட நன்மைகள் விளையும். வெள்ளிக்கிழமை தவறாமல்
மகாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.

Tags :
× RELATED மீனம்