×

கன்னி

30.5.2024 முதல் 5.6.2024 வரை

சாதகங்கள்: ராசிக்கு அதிபதியான புதன் பாக்கியஸ்தானத்தில் சூரியன் குருவோடு இணைவது நல்ல நேரம். தொழில் வெற்றி நடைபோடும். போட்டிகள் விலகும். குடும்ப ஒற்றுமை பலப்படும். குருவோடு சுக்கிரன் இணைந்து யோக பலனைத் தரும். புத்திர பாக்கியம் எதிர்பார்த்து இருக்கிறவர்களுக்கு அந்த நல்ல நிகழ்ச்சி நடைபெறும் நேரம் நெருங்குகிறது. திருமண முயற்சிகளுக்கு ஏற்ற நேரம் இது. சனி பகவான் நல்ல அமைப்பில் இருப்பதால், உங்கள் செயல்களில் திறமை அதிகரிக்கும். மேலதிகாரிகள் நன்கு ஒத்துழைப்பார்கள்.

கவனம் தேவை; இதுவரை ஏழில் சஞ்சரித்த செவ்வாய் அஷ்டமத்தில் வலிமை பெறுவது நல்லதல்ல. வண்டி வாகனங்களில் போகும்பொழுது கவனமாக இருக்க வேண்டும். பேச்சில் வீரியம் அதிகரித்து பகையைப் பெற்றுத் தரும் என்பதால், கவனமாகப் பேசவும்.

சந்திராஷ்டமம்: 3.6.2024 காலை 1.41 முதல் 5.6.2024 காலை 4.14 வரை சந்திராஷ்டமம் உண்டு. சந்திராஷ்டம தினத்தில் பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

பரிகாரம்: சனிக்கிழமை காகத்திற்கு ஒரு உருண்டை சாதம் வையுங்கள். பிதுர் காரியங்களை மறக்க வேண்டாம்.

 

Tags : Virgin ,
× RELATED கன்னி