கடகம்

கடகம்: வெற்றி ஸ்தானமான ஆறாம் இடம் பலமாக இருப்பதால் உங்கள். விருப்பங்கள், திட்டங்கள் எல்லாம் கூடி வரும். செவ்வாயின் அருளால் வீடு கட்டுவதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளைத் தொடங்குவீர்கள். சகோதர உறவுகளிடம் இருந்து முழு ஒத்துழைப்பு கிடைக்கும். குரு, சனி  இருவரின் மூலம் எதிர் பாராத தன லாபம் உண்டு. மருமகள் கர்ப்பம் அடைந்த இனிக்கும் செய்தி வரும். அரசாங்கத்திடம் இருந்து வர வேண்டிய சான்றிதழ், அனுமதி கடிதம் கைக்கு வரும். சுய தொழில் செய்பவர்களுக்கு வருமானம் கூடும். மனைவி பெயரில் புதிய தொழில் தொடங்கும் யோகம் உள்ளது.

பரிகாரம் : சென்னை திருப்போரூர் முருகப்பெருமானை தரிசிக்கலாம். வீட்டு வேலை செய்யும் ஏழைப் பெண்களுக்கு உதவலாம்.

Tags :
× RELATED கடகம்