×

சிம்மம்

 18.4.2024 முதல் 24.4.2024 வரை

சாதகங்கள்: இதுவரை அஷ்டமத்தில் இருந்த ராசிநாதன் சூரியன் பாக்கிய ஸ்தானத்தில் குருவோடு இணைந்து உங்கள் ராசியைப் பார்ப்பது மிக அற்புதமான யோக அமைப்பு. தசா புத்திகளும் ஜென்ம ஜாதகமும் நல்லபடியாக இருந்தால் யோக பலன்கள் நடைபெறும். தன குடும்ப அதிபதி புதன் வக்ர நிவர்த்தி பெறுவதால், குழப்பங்கள் நீங்கும். சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டு. பாகப் பிரிவினைகள் சுமுகமாக முடியும். வெளிநாட்டு வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டு. உழைப்புக்கு ஏற்ற பலன்கள் ஏற்படும். தடைகளை ஏற்படுத்தியவர்கள் விலகுவார்கள். நல்ல நட்பு கிடைக்கும். சுபகாரிய வாய்ப்புகள் அதிகரிக்கும்.

கவனம் தேவை: வார ஆரம்பத்தில் கண்ட சனியோடு செவ்வாயும் இணைந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால், பல ஏமாற்றங்கள் மற்றும் மனக்கலக்கங்கள் ஏற்படும். குடும்பத்தில் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். இரண்டில் கேதுவும் எட்டாம் இடத்தில் ராகுவும் இருக்கிறார்கள். தவறான வார்த்தைகளைப் பேசிவிட்டு அவஸ்தைப்பட வேண்டாம். சிலருக்கு தன்னம்பிக்கை குறைவு உண்டாகும். தேவையற்ற வாக்கு வாதங்கள் வேண்டாம்.

பரிகாரம்:சூரியனை வழிபட பிரகாசமான வாழ்க்கை கிடைக்கும். சனிக்கிழமை தோறும் அனுமனை வணங்குங்கள்.

 

 

Tags : Leo ,
× RELATED சிம்மம்