×

சிம்மம்

 9.5.2024 முதல் 15.5.2024 வரை

சாதகங்கள்: ராசிநாதன் சூரியன் வார இறுதியில் தொழில் ஸ்தானத்திற்கு மாறி குருவோடு இணைகிறார். அவர் உங்கள் தனஸ்தானத்தையும் சுகஸ்தானத்தையும் பார்வையிடுவதால், அந்த இடங்கள் பலம் பெறுகின்றன. உங்களுக்கு தர வேண்டிய கடன்கள் வசூல் ஆகும், நீங்கள் தர வேண்டிய கடனை பைசல் ஆகும் வாய்ப்பு உண்டு. சுக்கிரன் பாக்கியஸ்தானத்தில் விளங்குவதால், யோகமான சில விஷயங்கள் நடைபெறும். முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். பண வரவு அதிகரிக்கும். சுபகாரியங்கள் நடைபெற வாய்ப்புண்டு. புதன் அற்புதமான அமைப்பில் இருக்கின்றார். சுக்கிரனோடு சேர்ந்து அவருடைய சுபத்துவம் அதிகரிக்கிறது. இளைய சகோதரர்கள் உங்களோடு இணைந்து ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.

கவனம் தேவை: பாக்கிய அதிபதி அஷ்டமத்தில் ராகுவோடு இணைந்து இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இடுப்புக்கு கீழ் உள்ள பாகங்களில் பிரச்னைகள் ஏற்படலாம். வாகன பழுது ஏற்படும். சிலருக்கு திடீர் இடம் மாற்றங்கள் உண்டு. கண்டச் சனி உங்கள் ராசியைப் பார்ப்பதால், குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களின் மூலம் சில எதிர்பாராத பிரச்னைகளையும் சந்திக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்:பிரதோஷ நேரத்தில், லட்சுமி நரசிம்மரை வணங்குங்கள். பசுக்களுக்கு உணவளியுங்கள். பாரம் குறையும். சூரியனை வழிபட, பிரகாசமான வாழ்க்கை கிடைக்கும்.

 

Tags : Leo ,
× RELATED சிம்மம்